KALVI MINI – இரண்டாம் இடைத் தேர்வு 2025
12ம் வகுப்பு – உயிரியல் (மிருகவியல் பகுதி)
நேரம் : 1.30 மணி மொத்த மதிப்பெண்கள் : 50
வழிமுறைகள்:
- எல்லா கேள்விகளையும் கவனமாக வாசிக்கவும்.
- பகுதி – A யில் உள்ள கேள்விகள் அனைத்தும் கட்டாயம்.
- பகுதி – B மற்றும் C யில் உள்ள கேள்விகளுக்கு உள் தேர்வு தரப்பட்டுள்ளது.
- பகுதி – D யில் உள்ள கேள்விகளில் "எது வேண்டுமானாலும் ஒன்று" எழுதவும்.
- தேவைப்பட்டால் விளக்கப்படம் (Diagram/Flowchart) வரையலாம்.
பகுதி – A (10 × 1 = 10 மதிப்பெண்கள்)
1. செல்கிளைவு தான் இனப்பெருக்கமாக நடைபெறும் ஒரு உயிரினத்தின் பெயர் சொல்லவும்.
2. ஹார்மோன் வெளியிடும் கருப்பையில் இடப்படும் கருவி (IUD) ஒன்றின் பெயரை குறிப்பிடுக.
3. கொலோஸ்ட்ரம் (Colostrum) என்றால் என்ன?
4. மனித ஜீனோமில் உள்ள நியூக்ளியோடைடு அடுக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?
5. Y-குரோமோசோமை யார் கண்டுபிடித்தார்?
6. மலேரியா நோய்க்கு காரணமான நோய்க்கிருமி எது?
7. சுவிஸ் சீசில் உள்ள பெரிய துளைகளுக்குக் காரணமான பாக்டீரியா எது?
8. “Origin of Species by Natural Selection” என்ற புத்தகத்தை யார் வெளியிட்டார்?
9. Implantation என்பதை வரையறுக்கவும்.
10. AUG கோடோனின் இரட்டை செயல்பாடு என்ன?
பகுதி – B (5 × 2 = 10 மதிப்பெண்கள்)
11. வெளிப்புற மற்றும் உள்புற கருத்தடை வித்தியாசத்தை விளக்குக.
அல்லது
asexual reproduction மூலம் உருவாகும் குட்டி எதற்காக clone என அழைக்கப்படுகிறது?
12. மனிதர்களில் விதைப்பை (Testes) அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவம் சொல்லுக.
அல்லது
FSH, LH, hCG, hPL என்பவற்றின் விரிவுரைகள் எழுதுக.
13. Haplodiploidy என்றால் என்ன?
அல்லது
மனிதர்களில் பாலின இணைப்புச் சுரப்பிகளின் recessive பண்புகள் ஆண்களில் அதிகம் காணப்படுவதற்கு காரணம் என்ன?
14. Leading strand மற்றும் Lagging strand இடையே வேறுபாடு கூறுக.
அல்லது
DNA மற்றும் RNA இடையே மூன்று கட்டமைப்பு வேறுபாடுகளை எழுதுக.
15. ஆண்டிபயாட்டிக் எதிர்ப்பு (Antibiotic resistance) என்றால் என்ன? அதனை குறைக்க வழிகள் சொல்லுக.
அல்லது
நுண்ணுயிர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இரண்டு பயோ-ஆக்டிவ் மூலக்கூறுகளை (Bioactive molecules) மற்றும் அவற்றின் பயன்களை கூறுக.
பகுதி – C (5 × 3 = 15 மதிப்பெண்கள்)
16. மனித மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மூன்று தடுப்பு முறைகளை விளக்குக.
அல்லது
முழுமையான இனப்பெருக்க சுகாதாரம் அடைய இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை விளக்குக.
17. Rh factor பற்றிய மரபணுக் கட்டுப்பாட்டை விளக்குக.
அல்லது
Karyotyping பயன்பாடுகளை கூறுக.
18. Prokaryotes-இல் Transcription செயல்முறையை விளக்குக.
அல்லது
Lac operon மாதிரியை (glucose இல்லாமல், lactose இருக்கும் போது) விளக்குக.
19. டார்வினிசத்திற்கு (Darwinism) எதிரான முக்கிய எதிர்ப்புகளை விளக்குக.
அல்லது
Hardy-Weinberg சமநிலையை பாதிக்கும் Mutation, Natural Selection, Genetic drift ஆகியவற்றின் தாக்கத்தை விளக்குக.
20. HIV மனித உடலில் நுழைந்த பின் அதன் பெருக்கம் செயல்முறையை விளக்குக.
அல்லது
Immunoglobulin அமைப்பை விளக்குக.
பகுதி – D (3 × 5 = 15 மதிப்பெண்கள்)
21. மனித முட்டையின் அமைப்பை விளக்குக.
அல்லது
மாதவிடாய் சுழற்சியின் நிலைகளை விளக்குக.
22. Hershey-Chase பரிசோதனையை விவரிக்கவும். DNA தான் மரபணுக் பொருள் என்பதை அவர்கள் எவ்வாறு நிரூபித்தனர்?
அல்லது
DNA Fingerprinting செயல்முறையின் படிகளை விளக்குக.
23. Plasmodium vivax வாழ்க்கைச் சுழற்சியை விளக்குக.
அல்லது
கழிவுநீர் சிகிச்சை செயல்முறையின் படிகளை விளக்குக.
No comments:
Post a Comment